SuperTopAds

ஒசாமா பின்லேடன் இருந்த இடத்தை அமெரிக்க உளவுத்துறைக்கு சொன்னது யார்? -இம்ரான்கான் புதிய தகவல்!

ஆசிரியர் - Admin
ஒசாமா பின்லேடன் இருந்த இடத்தை அமெரிக்க உளவுத்துறைக்கு சொன்னது யார்? -இம்ரான்கான் புதிய தகவல்!

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் 2011 மே 2-ம் தேதி அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க உளவுத்துறை (சிஐஏ) சிறப்பு நடவடிக்கையால் கொன்றது. அபோதாபாத்தில் பின்லேடன் மறைவிடத்தை அமெரிக்காவிற்கு கூறியது யார்? என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியது. 

ஆனால் ஒசாமா பின்லேடன் இருப்பிடம் சம்பந்தமாக தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றே பாகிஸ்தான் அரசு மறுத்துவந்தது. இந்நிலையில் ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத்துறைக்கு சொன்னது யார்? என்பது தொடர்பாக இம்ரான் கான் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு முதல் முறையாக பிரதமராக பயணம் மேற்கொண்டுள்ள இம்ரான்கான் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாகிஸ்தானின் உளவு அமைப்புதான் ஒசாமா பின்லேடன் இருப்பிடம் பற்றிய தகவலை அமெரிக்காவிற்கு அளித்தது.

சிஐஏவிடம் கேட்டீர்களென்றால் அவர் இருந்த இடத்தை தொலைபேசி இணைப்பு மூலம் தகவல் அளித்தது ஐ.எஸ்.ஐ. அமைப்புதான் என்பதை கூறுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவை எங்களுடைய நட்பு நாடாகவே பார்க்கிறோம், ஆனால் அமெரிக்கா எங்களை நம்பவில்லை, எங்கள் பகுதியில் புகுந்து குண்டு போட்டு ஒரு மனிதரை கொன்றனர் எனவும் இம்ரான் கான் கூறியுள்ளார்.