சிறிய வள்ளங்களில் கடலுக்கு செல்வதை நிறுத்துங்கள்..! மீனவா்களுக்கு எச்சாிக்கை.

சிறிய வள்ளங்களில் கடற்றொழிலுக்கு செல்வதை நிறுத்துமாறு கடற்றொழில் நீாியல்வளத்துறை திணைக்களத்தின் அவதானிப்பு பிாிவு கூறியுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெரிய மீன் வள்ளங்கள் கடலுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடலுக்குச் செல்வோர் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.
சிறிய மீன்பிடி வள்ளங்கள் கடலுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்படும் என்றும் பிரிவு அறிவித்துள்ளது.