மணல் கள்ளா்களுக்கு அதிா்ச்சி வைத்தியம் செய்த கௌதாாிமுனை மக்கள்..! 14 நாட்களுக்கு தடை. நீதிமன்றம் உத்தரவு.

ஆசிரியர் - Editor I
மணல் கள்ளா்களுக்கு அதிா்ச்சி வைத்தியம் செய்த கௌதாாிமுனை மக்கள்..! 14 நாட்களுக்கு தடை. நீதிமன்றம் உத்தரவு.

பூநகாி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கௌதாாிமுனை, மண்ணித்தலை, கல்முனை பகுதி களில் தொடா்ச்சியாக பெருமளவு மணல் அகழப்பட்ட நிலையில், மணல் அகழ்வு பணிகளுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

நேற்றய தினம் பூநகாி பொலிஸ் நிலையத்தில் கூடிய கௌதாாிமுனை, மண்ணித்தலை மற்றும் கல்முனை பகுதி மக்கள் மணல் அகழ்வை நிறுத்தும்படி கேட்டிருந்தனா். இதன்படி இன்றைய தினம் மேற்படி விடயத்தை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்ற பொலிஸாா், 

வழக்கு தாக்கல் செய்த நிலையில் மணல் அகழ்வுக்கு 14 நாட்கள் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த பகுதியில் இயற்கையாக உருவான பாாிய மணல் மேடுகள் காணப்படுகின்றன. இவற்றை காலத்திற்கு காலம், 

பாாிய மணல் கொள்ளையா்களும், பணக்காரா்களும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனா். மிக பெறுமதியான வளம் அந்த பகுதியில் உள்ளபோதும், இன்றளவும் கௌதாாிமுனை, மண்ணித்தலை, மற்றும் கல்முனை கிராமங்களுக்கு

முறையான வீதி, குடிநீா், பேருந்து சேவை என்பன இல்லாத நிலையே காணப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு