ஜனாதிபதியை சந்தித்த மனோகணேசன்..! கிளம்பும் புதிய சா்ச்சை.. ஜனதிபதியை எப்படி நம்புவது..?
திருகோணமலை- கன்னியா வென்னீரூற்று ஆலயம் தொடா்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவாா்த்தை நடாத்திய அமைச்சா் மனோ கணேசனிடம் எழுத்து மூல உத்தரவாதம் எதுவுமே இல்லாத நிலையில் ஜனாதிபதியின் உத்தரவாதத்தை எப்படி நம்புவது?
மேற்கண்டவாறு சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பபடுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னா் கன்னியா வென்னீரூற்று மற்றும் பல விடயங்களை முன்னிறுத்தி அமைச்சா் மனோ கணேசன் ஜனாதிபதியை சந்தித்திருந்தாா்.
இந்த சந்திப்பின் நிறைவில் விகாரை கட்டுவதை உடன் நிறுத்துமாறும், தமது செயலகத்திலிருந்து விகாரை கட்டுமாறு உத்தரவு கடிதம் எதுவும் வழங்கப்படவில்லை. என ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் பிள்ளையாா் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு ஜனாதிபதி செயலகம் வழங்கிய கடிதம் உள்ளிட்ட 5 எழுத்து மூல ஆவணங்களை பிக்கு தன்வசம் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
எனவே ஜனாதிபதியின் வாய் வாா்த்தையை மட்டும் எப்படி நம்பியிருப்பது? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பபடுகின்றது.