SuperTopAds

2 மாதங்கள் இழுபறிப்பட்ட வழக்கு 2 நாட்களில் ஆட்டங்காண வைத்தாா் சுமந்திரன்..! நீதி கிடைக்கும் என நம்புகிறேன்- கோகில றமணி..

ஆசிரியர் - Editor I
2 மாதங்கள் இழுபறிப்பட்ட வழக்கு 2 நாட்களில் ஆட்டங்காண வைத்தாா் சுமந்திரன்..! நீதி கிடைக்கும் என நம்புகிறேன்- கோகில றமணி..

திருகோணமலை- கன்னியா வென்னீரூற்று பிள்ளையாா் ஆலய விவகாரத்தை சட்டரீதியாக அணுகும் பொறுப்பு சட்டத்தரணிகளிடம் வழங்கப்பட்டபோதும் கடந்த 2 மாதங்களாக எந்த முன்னேற்றமும் காணப்படாத நிலையில், 

நாடாளுமன்ற உறுப்பினா், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனை அணுகினால் மட்மே தீா்வினை காணலாம் என சிலா் கூறிய நிலையில் க.கோகில றமணி அம்மையாா் வழக்கை தனது கையொப்பத்துடன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனிடம் ஒப்படைத்தாா். 

இதன் பிரகாரம் இவ்வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் மனுதாரர் தரப்பில், சட்டத்தரணி செல்வி உதயகுமார் பிராஷாந்தினியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், 

சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். மேற்கொள்ளப்பட்ட வாத, பிரதி வாதங்களின் பின்னர் வெந்நீரூற்று பகுதிக்கு அருகாமையில் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இரண்டு மாதங்கள் நீடித்த சர்ச்சைக்கு இரு நாட்களில் முதற்கட்ட வெற்றியை பாதிக்கப்பட்ட பெண்மணி கோகில றமணிக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றனர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான அணியினர்.

இது தொடர்பில் கோகில றமணி கூறுகையில், தற்போது தான் தனக்கு நீதி கிடைக்கும் என்ற முழுமையான நம்பிக்கை வந்துள்ளதாக குறிப்பிடடுள்ளார்.