SuperTopAds

மீண்டும் ஹாங்காங்கில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்..!

ஆசிரியர் - Admin
மீண்டும் ஹாங்காங்கில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்..!

ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டோரை சீனாவிற்கு கொண்டு சென்று விசாரிக்க வகை செய்யும், மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், வன்முறையில் ஈடுபட்ட காவலர்கள் மீது தனி விசாரணை நடத்த கோரி பல்லாயிரக் கணக்கானோர் பேரணி நடத்தினர். 

சீனா கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், குற்றஞ்சாட்டப்படுபவர்களை சீனாவிற்கு கொண்டு சென்று விசாரிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் நாடாளுமன்றம் நோக்கி கண்டன பேரணி நடத்தினர்.

அப்போது போலீசார் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றதால் வன்முறை வெடித்தது. வரலாறு காரணாத இந்த போராட்டம் காரணமாக ஹாங்காங்கில் நாடு கடத்தும் மசோதா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதனை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி ஒரு சில இடங்களில் தொடர் போராட்டம் நடந்து வந்தன.

இந்தநிலையில் விக்டோரியா பூங்கா அருகே திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், போராட்டக்காரர்களை தாக்கிய காவலர்கள் மீது தனிவிசாரணை கோரி அரசு கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதி நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பை காரணம் காட்டி போலீசார் அவர்களை வான் சாய் (wan chai) அருகே தடுத்து நிறுத்தினர்.