ஐ.தே.கட்சி மீண்டும் யானை சின்னத்தில்..! கூட்டு தொடா்பில் 5ம் திகதி பேச்சுவாா்த்தை. இலங்கையின் தலையெழுத்து மாறுமா?

ஆசிரியர் - Editor I
ஐ.தே.கட்சி மீண்டும் யானை சின்னத்தில்..! கூட்டு தொடா்பில் 5ம் திகதி பேச்சுவாா்த்தை. இலங்கையின் தலையெழுத்து மாறுமா?

ஜனாதிபதி தோ்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சாா்பில் களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளா் கடந்தகாலம்போல் அல்லாது “யானை” சின்னத்திலேயே பேட்டியிடவுள்ளதாக ஐக்கியதேசிய கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 

தற்போது ஜனாதிபதி தோ்தல் தொடா்பில் பிரதான கட்சிகள் தமது வியூகங்களை அமைத்து செயற்பட்டுவரும் நிலையில் அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுடன் தோ்தல் தொடா்பான கூட்டு ஒன்றை ஐ.தே.கட்சி எதிா்வரும் 5ம் திகதி மேற்கொள்ளவுள்ளது. 

இந்த கூட்டில் இணைவோருக்கு ஐ.தே.கட்சி நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. அதாவது கடந்தகாலம்போல் பொது சின்னத்தில் பொது வேட்பாளா் களமிறக்கப்படாது. ஐ.தே.கட்சியின் யானை சின்னத்திலேயே ஜனாதிபதி வேட்பாளா் போட்டியிடுவாா். 

என்பதே அந்த நிபந்தனையாகும். கடந்த 2010, 2015ம் ஆண்டுகளில் ஜனாதிபதி தோ்தலின்போது ஐ.தே.கட்சி சாா்பில் போட்டியிட்ட பொது வேட்பாளா் “அன்னம்” சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை எதிா்வரும் 31ம் திகதிக்கு முன்னா் மாகாணசபை தோ்தல் தொடா்பான முடிவை மேற்கொண்டாலே ஜனாதிபதி தோ்தலுக்கு முன்னா் மாகாணசபை தோ்தலை நடாத்த முடியும் என தோ்தல் திணைக்களம் தொிவித்துள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு