மாலைதீவு, இந்திய கடற்கரைகளில் கரை ஒதுங்கும் இலங்கை மீன்பிடி படகுகள்..! மீனவா்கள் என்ன ஆனாா்கள்..?

ஆசிரியர் - Editor I
மாலைதீவு, இந்திய கடற்கரைகளில் கரை ஒதுங்கும் இலங்கை மீன்பிடி படகுகள்..! மீனவா்கள் என்ன ஆனாா்கள்..?

கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 20ற்கும் மேற்பட்ட இலங்கைக்கு சொந்தமான இழுவை படகுகள் மற்றும் இந்திய தீவு பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளதாக தொியவருகின்றது. 

கடற்தொழிலுக்காகன பயணித்த இந்தப் படகுகள், சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த கடற்பகுதிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், 

அவற்றை அங்கிருந்த மீட்பதற்கான பணிப்புரைகள் மேற்கொள்ளப்படவில்லை என கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இழுவைப்படகுகளுடன் தினமும் தொலைத்தொடர்பு முறைமையில் தொடர்பை ஏற்படுத்தி உரையாடி வருவதாக கடற்தொழில் 

திணைக்கள இயக்குனர் ஜெனரல் கினிகே குமார தெரிவித்துள்ளார். இலங்கையை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் காலநிலை தொடர்ந்தும் அசாதாரண நிலையில் உள்ளதனால், 

மாலைதீவு மற்றும் இந்திய கடற்பரப்புக்களில் தரித்து நிற்குமாறு குறித்த படகுகளை சார்ந்தவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு