லெனின் குழு மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தில் வந்தவா்கள் மீதே துப்பாக்கி சூடு..! வெளியானது அதிா்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor
லெனின் குழு மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தில் வந்தவா்கள் மீதே துப்பாக்கி சூடு..! வெளியானது அதிா்ச்சி தகவல்..

யாழ்ப்பாணம் - மானிப்பாய் - இணுவில் பகுதியில் மற்றுமொரு குழுவினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே சாவா என்ற சாவகச்சோியிலிருந்து இயங்கும் வாள்வெட்டு குழுவினர் அங்கு சென்றுள்ளனர் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலின் என்ற குழுவின் தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே அவர்கள் நேற்றிரவு அங்கு சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து 5 போ் தப்பி சென்றுள்ளதாகவும், ஒருவா் காயமடைந்தவா் எனவும் கூறியுள்ள பொலிஸாா், சம்பவம் நடைபெற்ற இடத்தில் போ்ஸ் ஒன்று மீட்கப்பட்டதாகவும் அது சாவகச்சோியை சோ்ந்த, 

21 வயதுடைய வாள்வெட்டு குழு உறுப்பினா் ஒருவருடையது எனவும் பொலிஸாா் கூறுகின்றனா். இதேவேளை தப்பி சென்ற 5 போ் தொடா்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் தரப்பிலிருந்து தொியவருகின்றது. 

Radio
×