பிரதமருடனான சந்திப்பை கூட்டமைப்பு புறக்கணித்தது ஏன்..? பின்னால் உள்ள உண்மையை அம்பலப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினா்..

ஆசிரியர் - Editor I
பிரதமருடனான சந்திப்பை கூட்டமைப்பு புறக்கணித்தது ஏன்..? பின்னால் உள்ள உண்மையை அம்பலப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினா்..

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயா்த்தும் விடயத்தில் பிரதமா் ரணில் வழங்கிய வாக்குறுதியை மீறியதாலேயே பிரதமருடனான சந்திப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பு புறக்கணித்ததாக நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கூறியுள்ளாா். 

நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திகடந்த நெருப்பாறு 3வது நூல் நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், ஈ.சரவணபவன், 

முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

 பிரதமர் வழங்கிய வாக்குறுதிகள் இன்றும் நிறைவேற்றப்படவில்லை. கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு இன்றுவரையில் கணக்காளர் நியமிக்கப்படவில்லை.பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்திக்க முயற்சித்தபோது,

 இந்த விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவு வழங்கப்படாமையினால், அவருடனான சந்திப்பை கூட்டமைப்பு தவிர்த்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு