விபத்தில் இரு இளைஞா்கள் படுகாயம்..! மோட்டாா் சைக்கிளை மோதி தள்ளிய அரச வாகனம்..

ஆசிரியர் - Editor I
விபத்தில் இரு இளைஞா்கள் படுகாயம்..! மோட்டாா் சைக்கிளை மோதி தள்ளிய அரச வாகனம்..

வவுனியா- நகாில் உள்ள காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞா்கள் படுகாயமடைந்துள்ளனா். 

இவ் விபத்து சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,காமினி பாடசாலையிலிருந்து மன்னார் பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு 

உரித்துடைய வாகனத்துடன் குருமன்காட்டிலிருந்து வவுனியா நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற 23 வயதுடைய இளைஞனே விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதன் காரணமாக தூக்கி வீசப்பட்ட இளைஞன் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு