ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடா்பில் சுமந்திரனுக்கு கூறினேன்..! நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாட்டு. விளக்கும் மனோ..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடா்பில் சுமந்திரனுக்கு கூறினேன்..! நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாட்டு. விளக்கும் மனோ..

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவுடனான சந்திப்பிற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. சுமந்திரனுக்கே அழைப்பு விடுத்தேன் என அமைச்சா் மனோகணேசன் கூறியுள்ளாா். 

கன்னியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சர் மனோ கணேசனால் ஒழுங்குபடுத்தப்பட்டது. 

கடந்த புதன்கிழமை இரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனோ கணேசனால் அறிவிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதன் காரணமாகவே 

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனிடம் கேட்டபோது, "நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தெரியப்படுத்தவில்லை. 

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அறிவித்தேன். அதை அந்தக் கட்சியின் உத்தியோகபூர்வ அழைப்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று நினைத்தேன்" என்று குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு