வாய்பாா்த்திருந்தவா்கள் இனியாவது அகற்ற நடவடிக்கை எடுக்கட்டும்..! எல்லாவற்றையும் என் தலையில் சுமத்தாதீா்கள்.. மனோ உருக்கம்.

ஆசிரியர் - Editor I
வாய்பாா்த்திருந்தவா்கள் இனியாவது அகற்ற நடவடிக்கை எடுக்கட்டும்..! எல்லாவற்றையும் என் தலையில் சுமத்தாதீா்கள்.. மனோ உருக்கம்.

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தை அபகாித்து அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடா்பான உண்மைகளை ஜனாதிபதி முன்னிலையில் நான் அம்பலப்படுத்தியிருக்கிறேன். இதற்குமேல் விகாரையை அங்கிருந்து அகற்றவேண்டியது என்னுடைய பொறுப்பல்ல. 

மேற்கண்டவாறு தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்துசமய விவகாரங்கள் அமைச்சா் மனோகணேசன் கூறியுள்ளாா். மேற்படி விகாரைக்கு எந்தவொரு தொல்பொருள் வரலாறும் கிடையாது என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளா், ஜனாதிபதி முன்னிலையில் கூறிவிட்ட நிலையில், 

அதனை எதற்காக அகற்றவில்லை? என எழுப்பபட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டு வந்துவிட்டேன். 

தொல்பொருள் சின்னங்கள் இருப்பது வீதியின் மறுகரையில் என்று கூறினார். விகாரையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மாத்திரம் ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள். அங்குள்ளவர்கள் கதைக்கலாம்தானே. எல்லாப் பழியையும் நானே ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? 

விகாரை கட்டி முடிக்கும் வரையில் அங்குள்ள பிரதிநிதிகள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. கட்ட முதலே தடுத்திருந்தால் நிறுத்தியிருக்கலாம்தானே? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு