சிறுமியை கடத்தி 3 தடவைகள் பாலியல் பலாத்காரம்..! காமுகனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டணை..

ஆசிரியர் - Editor I
சிறுமியை கடத்தி 3 தடவைகள் பாலியல் பலாத்காரம்..! காமுகனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டணை..

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமியை கடத்தி 3 தடவைகள் பாலியல் பலாத்காரம் புாிந்த குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீா்ப்பளித்துள்ளாா். 

எதிரி சிறு­மி­யைக் கடத்­திச் சென்ற குற்­றத்­துக்கு 3 ஆண்­டு­க­ளும், வன்­பு­ணர்த்­த­மைக்கு 12 ஆண்­ டு­க­ளும் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது. இந்­தச் சிறைத் தண்­ட­னையை குற்­ற­ வாளி ஒன்­றின்பின் ஒன்­றாக அனு­ப­விக்­க­வேண்­டும். 

சிறு­மியை இரண்­டா­வது மற்­றும் மூன்­றாது தடவை வன்­பு­ணர்ந்த குற்­றங்­க­ளுக்­காக எதி­ரிக்கு தலா 12 ஆண்­டு­கள் தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது. முத­லா­வது மற்­றும் இரண்­டா­வது தண்­ட­ னைக் காலம் நிறை­வ­டைந்த பின்­னர் மூன்­றா­வது மற்­றும் 

நான்­கா­வது குற்­றத்­துக்­கான சிறைத் தண்­ட­னையை குற்­ற­வாளி ஏக காலத்­தில் அனு­ப­விக்க முடி­ யும். அத­னால் எதிரி 27 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும் என்று மேல் நீதி­மன்ற நீதி­பதி தண்­ட­னைத் தீர்ப்­ப­ளித்­தார்.

முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்­புப் பகு­தி­யில் 2015ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் முத­லாம் திக­திக்­ கும் 15ஆம் திக­திக்­கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தி­யில் தாயா­ரின் பாது­காப்­பி­லி­ருந்த 16 வய­துக்­குட்­ பட்ட சிறு­மி­யைக் கடத்­திச் சென்று வன்­பு­ணர்ந்த குற்­றச்­சாட்­டில் 

இரா­ச­கு­மார் திருக்­கு­மார் என்­ப­ வர் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ டார். சிறுமி வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில் கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­ப­ருக்கு எதி­ராக முல்­லைத்­தீவு நீதி­வான் நீதி­மன்­றில் ஆரம்ப விசா­ர­ணை­கள் நடை­பெற்­றன. 

விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த சந்­தே­க­ந­பர் பின்­னர் பிணை­யில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­ டார். சந்­தே­க­ந­ப­ருக்கு எதி­ராக 4 குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வவு­னியா மேல் நீதி­மன்­றில் சட்ட மா அதி­ப­ரால் குற்­றப் பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டது. 

குற்­றப் பத்­தி­ரிகை எதி­ரிக்கு வாசித்­துக் காண்­பிக்­கப்­பட்­ட­போது அவர் சுற்­ற­வாளி என மன்­று­ ரைத்­தார். அத­னால் வழக்கு வவு­னியா மேல் நீதி­மன்­றில் நீதி­பதி இரா­ம­நா­தன் கண்­ணன் முன்­னி­ லை­யில் இடம்­பெற்­றது.

வழக்­குத் தொடு­நர் சார்­பில் அரச சட்­ட­வாதி நாக­ரட்­ணம் நிஷாந்த் வழக்கை நெறிப்­ப­டுத்­தி­னார். எதிரி சார்­பில் சட்­டத்­த­ரணி பிர­சாத் காரி­ய­வ­சம் முன்­னி­லை­யா­னார். எதிரி தன்­னைக் கடத்­திச் சென்று வன்­பு­ணர்ந்­தமை தொடர்­பில் முத­லா­வது சாட்­சி­யான 

பாதிக்­கப்­பட்ட சிறுமி சாட்­சி­ய­ம­ளித்­தார். சிறுமி வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டமை தொடர்­பில் மருத்­துவ பரி­சோ­த­னை­யில் தெளி­வாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது என்று நிபு­ணத்­துவ சாட்­சி­யத்­தில் சட்ட மருத்­துவ அதி­காரி சாட்­சி­ய­ம­ளித்­தார்.

எதிரி கூண்­டுச் சாட்­சி­ய­ம­ளித்­தார். அவர் தான் இந்­தக் குற்­றங்­க­ளைச் செய்­ய­வில்லை என்று மட்­ டுமே கூண்­டுச் சாட்­சி­யம் வழங்­கி­னார். அரச தரப்­புச் சாட்­சி­யங்­களை சந்­தே­கத்­துக்­கி­ட­மா­ன­ தாக்­கும் வகை­யில் எதிரி தரப்பு வாதங்­களை முன்­வைக்­க­வில்லை.

சாட்­சி­யங்­கள், எதிரி தரப்பு விசா­ரணை மற்­றும் சமர்ப்­ப­ணங்­கள் நிறை­வ­டைந்த நிலை­யில் வழக்­கைத் தீர்ப்­புக்­காக வவு­னியா மேல் நீதி­மன்­றம் நேற்­றைய தினத்­தைத் தீர்­மா­னித்­தி­ருந்­ தது. எதிரி மீதான 4 குற்­றச்­சாட்­டுக்­க­ளும் வழக்­குத் தொடு­ந­ரால் 

நியா­ய­மான சந்­தே­கங்­க­ளுக்கு அப்­பால் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால் எதி­ரியை 4 குற்­றச்­சாட்­ டுக்­க­ளி­லும் குற்­ற­வா­ளி­யாக மன்று தீர்­மா­னிக்­கின்­றது என்று மேல் நீதி­மன்ற நீதி­பதி இரா­ம­நா­ தன் கண்­ணன் தீர்ப்­ப­ளித்­தார்.

சிறு­மி­யைக் கடத்­திச் சென்ற குற்­றத்­துக்கு 3 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை வழங்­கப்­ப­டு­கி­றது. அத்­து­டன் 5 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதிக்­கப்­ப­டு­கி­றது. தண்­டப் பணம் செலுத்­தத் தவ­றின் 3 மாதங்­கள் சாதா­ரண சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க நேரி­டும்.

சிறு­மியை முத­லா­வது தட­வை­யாக வன்­பு­ணர்ந்த குற்­றத்­துக்கு எதி­ரிக்கு 12 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது. அத்­து­டன் பாதிக்­கப்­பட்­டச் சிறு­மிக்கு ஒரு லட்­சம் ரூபா இழப்­பீடு வழங்­கப்­ப­ட­வேண்­டும். 

அதனை வழங்­கா­வி­டின் 12 மாதங்­கள் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும். மேலும் 10 ஆயி­ரம் ரூபா தண்­டப் பணம் செலுத்த வேண்­டும். அத­னைச் செலுத்­தத் தவ­றி­னால் 6 மாதங்­கள் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும்.

சிறு­மியை இரண்­டா­வது தடவை வன்­பு­ணர்ந்த குற்­றத்­துக்கு எதி­ரிக்கு 12 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது. பாதிக்­கப்­பட்­டச் சிறு­மிக்கு ஒரு லட்­சம் ரூபா இழப்­பீடு வழங்­கப்­ப­ட­வேண்­டும். 

அதை வழங்­கா­வி­டின் 12 மாதங்­கள் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும். 10 ஆயி­ரம் ரூபா தண்­டப் பணம் செலுத்த வேண்­டும். அதைச் செலுத்­தத் தவ­றி­னால் 6 மாதங்­கள் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும்.

சிறு­மியை மூன்­றா­வது தடவை வன்­பு­ணர்ந்த குற்­றத்­துக்கு எதி­ரிக்கு 12 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது. பாதிக்­கப்­பட்­டச் சிறு­மிக்கு ஒரு லட்­சம் ரூபா இழப்­பீடு வழங்­கப்­ப­ட­வேண்­டும். 

அதை வழங்­கா­வி­டின் 12 மாதங்­கள் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும். 10 ஆயி­ரம் ரூபா தண்­டப் பணம் செலுத்த வேண்­டும். அதைச் செலுத்­தத் தவ­றி­னால் 6 மாதங்­கள் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும்.

எதிரி முத­லா­வது மற்­றும் இரண்­டா­வது குற்­றங்­க­ளுக்­கான முறையே 3 மற்­றும் 12 ஆண்­டு­கள் கடூ­ ழி­யச் சிறைத் தண்­ட­னையை ஒன்­றன் பின் ஒன்­றாக அனு­ப­விக்க வேண்­டும். மூன்­றா­வது மற்­றும் நான்­கா­வது குற்­றங்­க­ளுக்­கான தலா 12 ஆண்­டு­கள் 

சிறைத் தண்­ட­னையை ஏக காலத்­தில் அனு­ப­ விக்க முடி­யும். அத­னால் எதிரி 27 ஆண்­டு­கள் கடூ­ழி­ யச் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும் என்று மேல் நீதி­மன்ற நீதி­பதி தண்­ட­னைத் தீர்ப்­ப­ளித்­தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு