SuperTopAds

கடுமையான கடல் கொந்தளிப்பு..! 52 குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டது..

ஆசிரியர் - Editor I
கடுமையான கடல் கொந்தளிப்பு..! 52 குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டது..

இலங்கையில் தொடா்ந்தும் சீரற்ற காலநிலை நீடித்துவரும் நிலையில் மழை மற்றும் கடும் காற்று காரணமாக சிலாபம்- குருசபாடுவ பகுதியிலிருந்து 52 குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனா். 

சிலாபம் பகுதியில் கடல் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சிலாபம், 

குருசபாடுவ பிரதேசத்தில் வசிக்கும் 52 குடும்பங்களை தற்காலிகமாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த குடும்பங்கள் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளர். கடந்த நாட்களாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டமையினால் சிலாபம், 

குருசபாடு கடற்கரை பகுதிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. கடல் கொந்தளிப்பு காரணமாக சிலாபத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.