சமாதானமாக போவோம் என கேட்கிறாா்கள். எச்சில் தேனீா் ஊற்றிய காவாலிகள்..!
எச்சில் தேனீரை ஊற்றிவிட்டு சமாதானமாக போவோம் என ஊற்றியவரும், சமாதானமாக போங்கள் என பொலிஸாரும் கேட்பதாக தென் கைலை ஆதீன 2ம் குரு முதல்வா் தம்பிரான் அடிகளாா் கூறியுள்ளாா்.
சமாதானமாகச் செல்வதையேவிரும்புகிறேன் என்று எச்சில் தேநீர் ஊற்றிய சந்தேகநபர்களும் பொலிஸ் நிலையத்தில் வைத்துத் தெரிவித்தனர் என்றும் தம்பிரான் அடிகளார் தெரிவித் தார். இது தொடர்பில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:
கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலய இடித்து அழிப்பின் பின்னர் நடத்தப்பட்ட மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்தின் போது ஆதீன குருமுதல்வர் மீது சில நபர்கள் தேநீர் ஊற்றி அவரையும் அவர் சார்ந்தவர்களையும் அவமதித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வாய்மொழி மூலமான முறைப்பாடு பொலிஸாருக்கு உடனே வழங் கப்பட்டது. ஆனால் சம்பவ இடத்தில் இவ்வாறு அசம்பாவிதத்தை மேற்கொண்டவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதன் பின்னர் எழுத்து மூல முறைப்பாடு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. நேற் றையதினம் (நேற்றுமுன்தினம்) திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்கு நாம் அழைக்கப்பட்டோம்.
குறித்த அசம்பாவிதத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் தரப்பினரும் வந்திருந் தனர். விசாரணையின் பின்னர் எதிர்த்தரப்பினர் தாம் இவ்வாறான அசம்பாவிதத்தைச் செய்ய வில்லை. இந்தப் பிரச்சினையை இரண்டு தரப்பும் சுமுகமாக
முடித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பொலிஸாரின் பேச்சும், எதிர்த்தரப்பின் பேச்சும் அமைந்திருந்தது. ஆன்மிக நெறியில் பிற சமயத்தை மதித்தல், அன்பு செய்தல் இதையே நாம் பின்பற்றுகின்றோம். இனமுறுகலை தோற்றுவித்தல் எமது நோக்கம் அல்ல.
எச்சில் தேநீர் ஊற்றப்பட்டவுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இது மக்கள் மயப்படுத்தப்பட்ட பிரச்சினையாக மாறியிருக்காது. ஆகவே மக்கள் எம்மோ டும் நிற்கும்போது உடனடியாக சமாதானத்துக்கு
வருவதற்கு முடிவுகளை நாங்கள் எடுக்க முடியாது. மக்களுடன் கலந்துரையாடியே எமது முடிவை அறிவிப்போம் – என்று அவர் மேலும் தெரிவித்தார்.