SuperTopAds

இரா.சம்மந்தன்- ரணில் விக்கிரமசிங்க இடையில் சண்டையாம்..! நம்பினால் நம்புங்கள்..

ஆசிரியர் - Editor I
இரா.சம்மந்தன்- ரணில் விக்கிரமசிங்க இடையில் சண்டையாம்..! நம்பினால் நம்புங்கள்..

கல்முனை வடக்க தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், உள்நாட்டலுவல்கள் அமைச்சருடனான சந்திப்பை தமிழ்துசிய கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது. 

அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை எதிர்ப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கி­யது. அதற்கு நிபந்­த­னை­யாக கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்­துக்கு நிதி அதி­கா­ரம் முழு­மை­யாக வழங்­கப்­பட்டு கணக்­கா­ளர் நிய­மிக்­கப்­பட வேண்­டும் 

என்று வலி­யு­றுத்­தி­யது. தலைமை அமைச்­ச­ரும் அதற்கு உடன்­பட்டு எழுத்­து­மூ­லம் உறுதி வழங்­ கப்­பட்­டது. பிரதமா் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்­னாள் அமைச்­ச­ரும், முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்­கீம், 

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான கலந்­து­ரை­யா­டல் கடந்த திங்­கட் கிழமை இடம்­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பில் கல்­ முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்­தின் எல்லை நிர்­ண­யம் தொடர்­பில் 

ரவூப் ஹக்­கீம் கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தார். முத­லில் கணக்­கா­ளர் நிய­ம­னம் இடம்­பெ­றட்­ டும். அதன் பின்­னர் எல்லை நிர்­ண­யம் தொடர்­பில் ஆரா­ய­லாம் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் குறிப்­பிட்­டி­ருந்­தார். 

இது தொடர்­பில் தொடர் சந்­திப்பு எதிர்­வ­ரும் வியா­ழக்­கி­ழமை (நேற்று) நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­ டது. தலைமை அமைச்­சர் மற்­றும் உள்­நாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் ஆகி­யோர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரனை நேற்­றைய சந்­திப்­புக்கு அழைத்­துள்­ள­னர்.

வழங்­கிய வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்­தில் கணக்­கா­ளர் பத­வி­யைப் பொறுப்­பேற்­க­வில்லை. முத­லில் வழங்­கிய வாக்­கு­று­தியை நிறை­வேற்­ றுங்­கள். அதன் பின்­னர் பேச­லாம்’ 

என்று அவர்­க­ளி­டம் தெரி­வித்­த­தாக, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் குறிப்­பிட்­டார். இதன் பின்­னர் அம்­பாறை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கோடீஸ்­வ­ரனை உள்­நாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் தொடர்­பு­கொண்டு சந்­திப்­புக்கு வரு­மாறு அழைத்­துள்­ளார். 

மீண்­டும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரனை தொடர்­பு­கொண்டு, நீங்­கள் சந்­திப்­புக்கு வரத்­ தே­வை­யில்லை. கோடீஸ்­வ­ரனை சந்­திப்­புக்கு அழைத்­துள்­ளோம் என்று சாரப்­பட சுமந்­தி­ர­னி­டம் அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கோடீஸ்­வ­ர­னும், வழங்­கிய வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­டா­மல் சந்­திப்­ பில் கலந்து கொள்ள மாட்­டார் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் அமைச்­ச­ருக்­குப் பதில் வழங்­கி­யுள்­ளார்.

இதன் கார­ண­மாக நேற்­றைய சந்­திப்­பில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் பங்­கேற்­க­வில்லை.