திடீரென இடிந்து பள்ளதில் வீழ்ந்த கடைகள்..! காணாமல்போனவா் சடலமாக மீட்பு.

ஆசிரியர் - Editor I
திடீரென இடிந்து பள்ளதில் வீழ்ந்த கடைகள்..! காணாமல்போனவா் சடலமாக மீட்பு.

நுவரெலிய- கினிகத்தேனை பகுதியில் 10 வா்த்தக நிலைய கட்டிடங்கள் திடீரென இடிந்து பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. 

குறித்த பகுதியில் பெய்த கடும் மழை காரணமாகவே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் ஒருவர் சிக்குண்டு கிடப்பதாகவும், அவரை மீட்கும் பணி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் சில்லறை கடைகள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவை அடங்குகின்றன.

கினிகத்தேனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இப்பிரதேசத்தில் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக சரிவில் சிக்குண்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய கே.எம்.ஜமால்டீன் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு