வீட்டில் இருந்தவா்களுடன் சண்டை..! ஆடுகளை வெட்டி கொன்றுவிட்டு, வீட்டுக்கு தீவைத்த காவாலி..

வீட்டிலிருந்தவா்களுடன் சண்டை பிடித்துவிட்டு வீட்டிலிருந்து ஆடுகளை வெட்டி கொன்ற நபா் வீட்டுக்கு தீயிட்டு கொழுத்திய சம்பவம் விசுவமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதனால் வீட்டில் இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், நான்கு ஆடுகளும் உயிரிழந்துள்ளன.
சம்பவத்தின் போது வீட்டில் மனைவி, பிள்ளைகள் எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த நபா் கைது செய்யப்பட்டுள்ளாா்.