பலாலியிலிருந்து இந்தியாவுக்கான விமானசேவை..! அரசாங்கத்தின் தீா்மானம் இதுதான்..

ஆசிரியர் - Editor I
பலாலியிலிருந்து இந்தியாவுக்கான விமானசேவை..! அரசாங்கத்தின் தீா்மானம் இதுதான்..

யாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் 4 நகரங்களுக்கு விமான சேவையை மிக விரைவில் நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. 

மேற்கண்டவாறு இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. இதன்படி, பெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து 

நேரடி விமான சேவையை தொடங்க உள்ளதாக சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜூன ரத்னதுங்க தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா 300 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது.

எதிர்வரும், ஒக்டோபர் மாதம் முதல் பலாலி விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாத காரணத்தினால் நீண்ட நேரம் பயணித்து கொழும்பு வழியாக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியுள்ளது.

இந்நிலையிலேயே, யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விமான சேவையை விரைவில் தொடங்க 

இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு