SuperTopAds

மலையக பகுதிகளில் கடும் மழை..! வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது.. மக்களுக்கு எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
மலையக பகுதிகளில் கடும் மழை..! வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது.. மக்களுக்கு எச்சாிக்கை..

மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 150 மில்லி மீற்றா் மழை பெய்யும் என வாளிமண்டலவியல் திணைக்களம் எச்சாித்திருக்கும் நிலையில் மலையகத்தில் பல பகுதிகளில் வெள்ளநீா் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. 

இதேவேளை களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. லக்சபான நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கெனியன் நீர்தேக்கத்தில் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. 

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நீரேந்தும் பிரதேசங்களில் வசித்து வரும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பாக களனி மற்றும் களு கங்கைகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் 

கவனமாக இருக்க வேண்டும் என இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸாரும், முப்படையினரும் தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் 

அவர் கூறியுள்ளார். இது சம்பந்தமான தகவல்களை வழங்க 117 தொலைபேசி எண் 24 மணி நேரமும் இயங்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.