தீா்வு வரும், வராது.. ஒரு கட்சிக்குள் இரு கருத்து..! உருட்டும் பிரட்டுமாய் அரசியல்வாதிகள், சிரட்டையும் கையுமாய் மக்கள்..!

ஆசிரியர் - Editor I
தீா்வு வரும், வராது.. ஒரு கட்சிக்குள் இரு கருத்து..! உருட்டும் பிரட்டுமாய் அரசியல்வாதிகள், சிரட்டையும் கையுமாய் மக்கள்..!

நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழா்களுக்கு தீா்வு கிடையாது என்பதை பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்கள் ஊடாக அறிய முடிவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் த.சித்தாா்த்தன் கூறியுள்ளாா். 

அதேவேளை வாக்குறுதி வழங்கியதன் பிரகாரம் 2 ஆண்டுகளுக்குள் தீா்வு வழங்கப்படும் பிரதமரை யாழ்ப்பாணத்தில் சந்தித்தபோதும் அவா் அதனை எங்களுக்கு கூறினாா் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கூறியுள்ளாா். 

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போதே சித்தாா்த்தன் இவ்வாறு கூறியுள்ள அதேவேளை தீா்வு விடயம் தொடா்பாக ஊடகம் ஒன்று கேட்டபோது மாவை சேனாதிராஜா இவ்வாறு கூறியுள்ளாா். 

ஒரே கட்சியை சோ்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினா்கள் இரு கருத்துக்களை கூறுவது மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. இந்த விடயம் தொடா்பாக சித்தாா்த்தன் மேலும் கூறும்போது 

 “இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென பலர் நினைத்தார்கள். அதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் கூட செய்யப்பட்டிருந்தது. 

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக அரசியல் நிர்ணய பேரவை அமைக்கப்பட்டு அதற்குள் 4,5 குழுக்கள் இருந்தன. அதில் ஒன்றில் தலைவராக கூட இருந்தேன்.இவ்வாறு பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த காலத்தில் கூட 

எங்களை பொறுத்தவரை நியாயமான தீர்வுகள் எட்டப்படாவிட்டாலும் அவைகளின் முழுமையான பங்களிப்பை வழங்கினோம்.எங்களால் முடிந்தளவு ஒரு நியாயமான அறிக்கையை எம்முடைய குழுவுடன் இணைந்து வழங்கினோம். 

இவ்வாறான விடயங்கள் நீண்டகாலகாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.சர்தேச அழுத்தங்களினால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகளாக இருக்கின்றமையினால் 

நியாயமான தீர்வு கிடைக்குமென எல்லோரும் எதிர்ப்பார்த்தார்கள். எனினும் வழமையோன்று குறித்த நடவடிக்கைகளெல்லாம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் 2 வருடங்களிலேயே தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும். 

ஆனால் இந்த அரசாங்கத்தினால் அல்ல என பிரதமர் கூட அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறினார். அதாவது எதிர்வரும் அரசாங்கத்தினாலேயே தீர்வு கிடைக்குமென்பதையே பிரதமரின் இந்த கருத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளார். 

ஆகவே இனியும் தீர்வு கிடைக்குமென எதிர்ப்பார்ப்பது ஏற்புடையதல்ல” என சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதேவேளை மாவை சேனாதிராஜா மேலும் கூறும்போது தாம் யாழ்ப்பாணத்தில் பிரதமரை தனியே சந்தித்து பேசியதாகவும். 

ஏற்கனவே பேசப்பட்டதன்படி 2 ஆண்டுகளில் தீா்வு நிச்சயமாக வழங்கப்படும் என கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு