பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடை..! இன்றும் கணக்காளா் இல்லை. கல்முனை வடக்கு மக்கள் மீண்டும் ஏமாற்றம்..

ஆசிரியர் - Editor I
பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடை..! இன்றும் கணக்காளா் இல்லை. கல்முனை வடக்கு மக்கள் மீண்டும் ஏமாற்றம்..

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளா் இன்று உத்தியோகபூா்வமாக வருவாா் என பொதுமக்கள் எதிா்பாா்த்திருந்த நிலையில், இன்றும் அவா் கடமைக்கு திரும்பாத நிலையில் எதிா்பாா்த்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். 

குறித்த பிரதேச சபைக்கு கணக்காளராக நியமிக்கப்பட்டிருப்பரின் தற்போதைய கடமைகளை பொறுப்பேற்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை 93 ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் முழுமையான பிரதேச செயலகமாக இயங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் ரீதியாக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. 

எனினும், சில முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அழுத்தம் காரணம் அது நடைமுறைப்படுத்தப்படால் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தரமுயர்த்துமாறு கோரிக்கை விடுத்து பொதுமக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன்

 சிவில் அமைப்புக்கள் மற்றும் சமய தலைவர்களினால் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் தமிழ் மக்களின் ஆதரவு வலுத்து வந்த நிலையில் 3 மாத காலப் பகுதியில் குறித்த விவகாரத்தை 

தீர்த்து வைப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியிருந்தது. இந்நிலையில், அண்மையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு 

ஆதரவு வழங்கும் விவகாரத்தில் கல்முனை விவகாரம் முக்கிய அம்சமாக காணப்பட்டது ஆகையால், முதற்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்கி தனித்துவமான கணக்காளர் ஒருவரை நியமிப்பதற்கும் 

அனைத்து தரப்பும் இணங்கி, தேவையான விடயங்களும் ஆவண ரீதியாக நிறைவடைந்ததன் பின்னரே கூட்டமைப்பு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்த்து வாக்களித்திருந்ததாக கூறப்பட்டது.இந்நிலையில், 

உகண பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தமிழ் உத்தியோகத்தர் ஒருவரே கல்முனைக்கு கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான இடமாற்ற கடிதம் வழங்கப்பட்டபோதும் உகண பிரதேச செயலகத்திற்கு பதில் கணக்காளர் இதுவரை நியமிக்கப்படாததால் 

அவர் தனது புதிய பொறுப்பை இதுவரை ஏற்க முடியவில்லை. இந்நிலையில் இன்று கணக்காளர் கல்முனைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும், அவர் வருகை தராமையினால் கல்முனை வடக்கு தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு