SuperTopAds

ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய தீா்மானம்..! அதிா்ச்சியில் தெற்கு அரசியல் தரப்புக்கள்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய தீா்மானம்..! அதிா்ச்சியில் தெற்கு அரசியல் தரப்புக்கள்..

மாகாணசபைகள் தோ்தலை நடாத்த ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா தீா்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

தற்போது ஊவா மாகாணசபை மாத்திரமே இயங்கி வருகிறது. ஊவா மாகாண சபையையும் கலைத்து விட்டு, 9 மாகாணங்களுக்கு ஒரே நேரத்தில் 

தேர்தலை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி பதவிக்காலம் முடியும் ஊவா மாகாணசபை, 

இந்த வாரத்திற்குள் கலைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் தேசிய முக்கியத்துவம் மிக்க தேர்தலுக்கு முன்னர், 

தமது பலத்தை பரீட்சித்து பார்க்க அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான 

கூட்டணியும் விரைவாக உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் 

எந்த சட்ட ரீதியான சிக்கல்களும் இல்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.