SuperTopAds

பௌத்த பிக்கு உள்ளிட்ட காவாலிகளுக்கு செக் வைத்தாா் அமைச்சா் மனோ..! கன்னியாவில் பௌத்த விகாரை கட்ட இடைக்கால தடை..!

ஆசிரியர் - Editor I
பௌத்த பிக்கு உள்ளிட்ட காவாலிகளுக்கு செக் வைத்தாா் அமைச்சா் மனோ..! கன்னியாவில் பௌத்த விகாரை கட்ட இடைக்கால தடை..!

திருகோணமலை கன்னியா வென்னீரூற்று பகுதியில் இடம்பெற்ற அசாதரண நிலமை குறித்து இந்து சமய விவகாரங்களுக்கான அமைச்சா் மனோகணேசன் சற்று முன்னா் ஜனாதிபதியுடன் உரையாடியிருக்கின்றாா். 

கன்னியாவில், விகாரை கட்டும்படி தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்பு செயலாளருக்கு தான் கூறவில்லை என ஜனாதிபதி என்னிடம் கூறினார். அப்படி எழுதப்பட்டிருந்தால் இதுபற்றி விசாரிப்பதாக உறுதியளித்தார்.

மேலும் இது தொடர்பில் தமிழ் எம்பிகளின் தூதுக்குழுவை சந்திக்க என்னிடம் அவர் உடன்பட்டார். இதற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படும்.

இதையடுத்து இவ்விவகாரம் பற்றி  இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமான பணிக்கும் கன்னியாவில் இடம் கொடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவை அழைத்து நான் சற்றுமுன் கூறியுள்ளேன்.