உயிா்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலுடன் தொடா்புடைய அனைவருக்கும் மரண தண்டணை..! உறுதிபட கூறினாா் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
உயிா்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலுடன் தொடா்புடைய அனைவருக்கும் மரண தண்டணை..! உறுதிபட கூறினாா் ஜனாதிபதி..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடா்புடைய அனைவருக்கும் துாக்கு தண்டணை விதிக்கப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா். 

இன்று (16) பெலேந்த ரஜமகா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாது கோபுரம், நூல் நிலையம் மற்றும் சமய உரை மண்டபம் ஆகியவற்றை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:தூக்குத் தண்டனையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டவரைவொன்றைக் கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் முயற்சி ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற அழிவுகளின் மூலம் சுமார் 300 அப்பாவி மக்களின் உயிர்களை பழியெடுத்த கொடூர பயங்கரவாத நடவடிக்கைக்கு 

வகை கூரவேண்டியவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனையை தவிர்ப்பதற்காக எடுக்கப்படும் முயற்சியாகுமென தான் நம்புகின்றேன்.நாட்டின் குற்றவியல் சட்டத்திற்கேற்ப கொலை, இராஜ துரோகம் போன்று பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக குற்றவாளியாக இனங்காணப்பட்டால் 

தூக்குத் தண்டனை வழங்கப்படுமென்பதுடன், தூக்குத் தண்டனையை நீக்குவதற்கு அரசில் உள்ள சிலர் எடுக்கின்ற முயற்சியின் மூலம் எந்தவொரு குற்றவாளிக்கும் தண்டனை வழங்க முடியாது.மத்திய வங்கி கொள்ளைக்குப் பொறுப்பான அனைத்து வகைகூறவேண்டியவர்களும் தற்போது இனங்காணப்பட்டுள்ளனர். 

அவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டுக்கு வெளியே உள்ளவர்களுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆளுநர் அர்ஜூண மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக நான் சிங்கப்பூர் பிரதமருடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியிருக்கின்றேன். 

இந்த அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. 

அவர்களுக்கெதிராக தெளிவான சாட்சிகள் உள்ளன. சட்டத்திற்கு அமைவாக அவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.ச மூகத்தை நல்வழிப்படுத்துவதற்கு அரச நிர்வாகத்தில் தண்டனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். 

தண்டனைக்கு பயப்படுவதன் மூலம் சமூகத்தில் குற்றங்கள் குறைந்து சிறந்ததொரு நாட்டையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப முடியும் – என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு