தொண்டா் ஆசிாியா் நியமனம் பெற்ற 41 பேருக்கு எதிராக முறைப்பாடு..! பொய்யை கூறி நியமனம் பெற்றனா்..

ஆசிரியர் - Editor I
தொண்டா் ஆசிாியா் நியமனம் பெற்ற 41 பேருக்கு எதிராக முறைப்பாடு..! பொய்யை கூறி நியமனம் பெற்றனா்..

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற ஆசிரியர்கள் சமர்ப்பித்த உறுதிப்படுத்தல் ஆவணங்கள் போலியானவை என வடமாகாண கல்வி அமைச்சின் கவனத்திற்கு எழுத்தில் முறையிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் 2015ஆம் ஆண்டிற்கும் முன்பு தொண்டர்களாகப் பணியாற்றிய தொண்டர்களிற்கு திருகோணமலையில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நியமனம் வழங்கப்பட்டது. இந்த நியமனத்திற்காக வயது எல்லை 

50 எனவும் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில் 52 வயதினையுடையவர்கள் 8 பேர் உள்ளதாகவும் அதிபரின் ஒப்பம் போலியாகப் பெற்றவர்கள் 10ற்கும் மேற்பட்டோர் உள்ளதோடு வலயத்தின் ஒப்பமும் போலியாகப் பெறப்பட்டதாக 

தற்போது வடமாகாண கல்வி அமைச்சிற்கு முறையிடப்பட்டுள்ளது. இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் பாடசாலை அதிபர் கடந்தமுறை தனது பாடசாலையில் தொண்டராசிரியர்களாக பணியாற்றியதாக 14 தொண்டர்களிற்கு கடிதம் 

வழங்கிய நிலையில் அதே அதிபர் தற்போதும் 11 தொண்டர்களிற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளதோடு கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றி தற்போது யாழ்ப்பாணத்தில் தீவகம் ஒன்றின் கல்வி அதிகாரியா பணியாற்றும் ஒருவர் 

தனது உறவுகளிற்கு அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் கடிதம் வழங்கிய நிலையிலேயே ஆசிரிய நியமனங்களை பெற்றுள்ள நிலையில் குறித்த நால்வரும் வன்னியின் பாடசாலையை ஒருநாள்கூட பார்த்ததே கிடையாது எனவும் முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வடக்கு மாகாணத்தில் வழங்கப்பட்ட நியமனத்தில் மட்டும். 41ஆசிரியர்களிற்கு எதிராக முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது 

கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து உண்மையை கண்டறிந்த பின்பே இவை தொடர்பில் பதிலளிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு