290 டெட்டனேட்டா்கள் மீட்பு..! வீட்டுக்குள் மறைத்துவைத்த 4 போ் கைது.. பொலிஸாா், அதிரடிப்படையினா் குவிக்கப்பட்டதால் பதற்றம்.

ஆசிரியர் - Editor
290 டெட்டனேட்டா்கள் மீட்பு..! வீட்டுக்குள் மறைத்துவைத்த 4 போ் கைது.. பொலிஸாா், அதிரடிப்படையினா் குவிக்கப்பட்டதால் பதற்றம்.

பிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு டெ்டனேட்டா்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயாில் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளா் கூறியுள்ளாா். 

பிலியந்தலை ஹெடிகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து சுமார் 290 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரும் அவரது இரு மகன்கள் மற்றும் டெட்டனேட்டர்களை வாங்கி வந்தவர் 

என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவருமாக நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Radio
×