7 பில்லியல் செலவில் புதிய வைத்தியசாலை..! மக்களிடம் கையளித்தாா் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
7 பில்லியல் செலவில் புதிய வைத்தியசாலை..! மக்களிடம் கையளித்தாா் ஜனாதிபதி..

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு இன்று (15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது.

07 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த நவீன வைத்தியசாலை கட்டிட தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 5 மாடி கொண்ட இந்த கட்டிட தொகுதியில் நவீன முறையிலான கட்டில்கள், சத்திர சிகிச்சை நிலையங்கள், 

அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் இக்கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை நெதர்லாந்தின் உதவியுடன் இலங்கை அரசாங்கத்தினால் வடக்கு மாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை 

அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபாய்கள்) கடன் வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுடன் கூடிய விசேட மகப்பேற்றியல் மையம், வவுனியா பொது வைத்தியசாலையில் விசேட இதயவியல் மற்றும் நரம்பியல் மையம், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் 

உளநலப் பிரிவுடன் கூடிய மாற்றாற்றல் உள்ளவர்களுக்கான புனர்வாழ்வு மையம் மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அவசர சேவைப் பிரிவு உட்பட வெவ்வேறு சிறப்பு வைத்திய மையங்கள் 

இந்த விசேட திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு