SuperTopAds

இலங்கையில் தீவிரமாக பரவும் ஒருவகை மூளை காய்ச்சல்..! 3 மாத குழந்தை உட்பட 4 போ் இதுவரை பலி..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் தீவிரமாக பரவும் ஒருவகை மூளை காய்ச்சல்..! 3 மாத குழந்தை உட்பட 4 போ் இதுவரை பலி..

இலங்கையில் ஒருவகை மூளை காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாகவும் இந்த வருடத்தில் கொழும்பில் மட்டும் 4 போ் இந்த காய்ச்சலினால் உயிாிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் பழங்கள் விற்பனை செய்த 31 வயதான இளைஞன் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். ஏனைய பழ விற்பனையாளர்களுக்கு இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு 

உடனடியாக மருந்து பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய் பரவக்கூடியதல்ல எனினும் கிருமி பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சல் 

காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்த அனைவரையும் அன்றைய தினமே அடக்கம் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 

கல்பிட்டியப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான ஒருவரும், சிங்கப்பூரில் இருந்து வந்த 3 மாத குழந்தை ஒன்றும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். பக்ரீரியா ஒன்றின் ஊடாக இந்த நோய் ஏற்படுவதாகவும், 

இதனால் சிறிய அளவேனும் அருகில் உள்ளவருக்கு பரவ கூடும் எனவும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.