தென்னிலங்கையிலிருந்து வந்து முல்லைத்தீவில் கசிப்பு வடித்துக் கொண்டிருந்த இரு சிங்களவா்கள் கைது..! கடற்படையிடம் சிக்கினா்.

ஆசிரியர் - Editor I
தென்னிலங்கையிலிருந்து வந்து முல்லைத்தீவில் கசிப்பு வடித்துக் கொண்டிருந்த இரு சிங்களவா்கள் கைது..! கடற்படையிடம் சிக்கினா்.

முல்லைத்தீவு- கொக்கிளாய் பகுதியில் கசிப்பு வடித்துக் கொண்டிருந்த இரு சந்தேகநபா்களை கடற்படையினா் கைது செய்துள்ளதுடன், 130 லீற்றா் கசிப்பையும் கைப்பற்றியுள்ளனா். 

கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் கொக்கிளாய் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, 

இந்த சட்டவிரோத மதுபானம் தயாரித்த இரண்டு சந்தேக நபர்களுடன் 130 லீற்றர் மதுபானம் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது. 

மேலும், 02 பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 42 வயதுடைய மதுரங்குளி மற்றும் ராகம பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களும் உடமைகளும் கொக்கிளாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு