யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற ரயிலுடன் மோதி தந்தையும், மகளும் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற ரயிலுடன் மோதி தந்தையும், மகளும் உயிாிழப்பு..!

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற புகைரதத்துடன் மோதி தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிாிழந்த சம்பவம் வேயங்கொட பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை 6 மணியளவில் காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ரத்தொழுகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய தந்தையும் , 11 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.வேயாங்கொட பிரதேசத்திலிருந்து மகளை பரீட்சைக்காக பாடசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே 

விபத்து இடம்பெற்றதாக வேயாங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். சடலங்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Radio
×