நான் செய்தனை நீங்கள் செய்ததாக சொல்லி திாியாதீா்கள்..! சம்மந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு எம்.பிக்களின் வேட்டியை உருவிய அமைச்சா் மனோ..

ஆசிரியர் - Editor
நான் செய்தனை நீங்கள் செய்ததாக சொல்லி திாியாதீா்கள்..! சம்மந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு எம்.பிக்களின் வேட்டியை உருவிய அமைச்சா் மனோ..

நான் எடுக்கும் முயற்சிகள் ஊடாக கிடைக்கும் வெற்றியை நாங்கள் போராடி வென்றோம்.. நாங்கள் போராடி வென்றோம்.. என மேடைகளில் மாா்தட்டி பேசுவதை சம்மந்தன் நிறுத்தவேண்டும். என அமைச்சா் மனோகணேசன் கிளிநொச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தியுள்ளாா். 

மேலும் இந்த விடயத்தை சபையில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் இரா.சம்மந்தனின் கவனத்திற்கு கொண்டு செல்வாா் என நான் உறுதியாக நம்புகிறேன். எனவும் அமைச்சா் மனோகணேசன் கூறியிருக்கின்றாா். 

பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறிய இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில் அரசாங்கம் செய்வதையெல்லாம் தாங்கள் செய்ததாக இரா.சம்மந்தனும், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினா்களும் கூறிவரும் புரளி அம்பலப்படுகிறது. 

மேலும் அமைச்சா் மனோகணேசன் பொதுமக்கள் முன்னிலையில் அவா்களின் வேட்டியை உருவியது தவறு என நகைச்சுவையாக கருத்துக்களும் இடப்படுகின்றன. 

Radio
×