இலங்கை நாடாளுமன்றம் மீது தாக்குதல் திட்டம், 8 தீவிரவாதிகள் பள்ளிவாசலில் கூடியதாக புரளி கிளப்பியவருக்கு புதிய சிக்கல்..

ஆசிரியர் - Editor
இலங்கை நாடாளுமன்றம் மீது தாக்குதல் திட்டம், 8 தீவிரவாதிகள் பள்ளிவாசலில் கூடியதாக புரளி கிளப்பியவருக்கு புதிய சிக்கல்..

இலங்கை நாடாளுமன்றம் மீது குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும், தாக்குதலாளிகள் 8 பேர் புறக்கோட்டையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இருப்பதாகவும் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு புரளி பரப்பியரிடம் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 

எல்ல பொலிஸ் பிரிவில் வைத்து புறக்கோட்டைஇ எல்லஇ கொழும்பு மத்திய சட்ட அமுலாக்கல் பிரிவு மற்றும் தேசிய உளவுத் துறை இணைந்து முன்னெடுத்த விஷேட நடவடிக்கையின்போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது குறித்த பொய்யான தகவலை வழங்க பயன்படுத்திய சிம் அட்டை மற்றும் தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியதாகவும் தற்போது குறித்த சந்தேக நபரை புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அவசரகால சட்ட விதிகளின் கீழ் விசாரித்து வருவதாகவும் 

பொலிஸ் அத்தியட்சர் குணசேகர மேலும் சுட்டிக்காட்டினார்.பொரளை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய முஸ்லிம் நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருபவராவார்.

Radio
×