தங்கத்தால் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பாிசு பொருட்களை அருங்காட்சியகத்திற்கு வழங்கும் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor
தங்கத்தால் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பாிசு பொருட்களை அருங்காட்சியகத்திற்கு வழங்கும் ஜனாதிபதி..

தங்கத்தால் உருவாக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனவின் இல்லத்தில் உள்ளதாக உயா் அதிகாாி ஒருவா் கூறியுள்ளாா். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியால் இந்தத் துப்பாக்கி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக உலகின் பல நாடுகளை சேர்ந்த அரச தலைவர்கள் பெறுமதியான பல பரிசுகளை வழங்கியுள்ளனர்.

இந்த பரிசுப்பொருள்களை பொலன்னறுவையில் புதிதாக திறக்கப்பட்ட அருங்காட்சியகத்துக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக 

செயலக உயர் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Radio
×