கள்ளத்தனமாக முல்லைத்தீவுக்குள் நுழைந்த வீரவங்ச..! தமிழ் மக்களின் காணிகளை களவாடியவா்களை சந்தித்தாா்..

ஆசிரியர் - Editor
கள்ளத்தனமாக முல்லைத்தீவுக்குள் நுழைந்த வீரவங்ச..! தமிழ் மக்களின் காணிகளை களவாடியவா்களை சந்தித்தாா்..

நாடாளுமன்ற உறுப்பினா் விமல் வீரவங்ச இன்று முல்லைத்தீவுக்கு மிக இரகசியமாக சென்று தமிழ் மக்களின் காணிகள், குடியிருப்புக்கள், ஆலயங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு சென்றுள்ளாா். 

முல்லைத்தீவு மணலாறு பகுதியில் சிங்கள மக்களுடனான "வடக்கையும் தெற்க்கையும் இணைக்கும் சகோதரத்துவத்தின் மக்கள் சந்திப்பு " என்னும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள விமல் வீரவன்ச குழுவினர் முன்னதாக 

கொக்கிளாய் விகாரை மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ள விகாரை என்பனவற்றுக்கு இரகசியமாக திடீர் விஜயம் மேற்கொண்டனர்..இந்த திடீர் விஜயம் குறித்து ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் 

வினவியபோது கருத்துக்கள் எதையும் கூற மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Radio
×