இராணுவங்களால் சீரழிக்கப்பட்ட தேசம்..! உண்மையை கூறி மனம் இறைஞ்சிய ஆளுநா்..

ஆசிரியர் - Editor
இராணுவங்களால் சீரழிக்கப்பட்ட தேசம்..! உண்மையை கூறி மனம் இறைஞ்சிய ஆளுநா்..

காலத்திற்கு காலம் இராணுவங்களால் சீரழிக்கப்பட்ட தேசத்தில் இன்னொரு மத கலவரம் வேண்டாம் என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கேட்டுள்ளாா். 

இந்து சமய விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தெய்வீக சேவைத் திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த தேசம் கண்ணீர் சிந்திய தேசமாகும். 

இராணுவங்களால் சீரழிக்கப்பட்ட தேசமாகும். 30 வருடங்களாக இடம்பெற்ற இனக்கலவரம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் 

இன்னொரு மதக்கலவரம் உருவாகிவிடக்கூடாதுதமிழர்களை பிளவுபடுத்துவதே வெளிசக்திகளின் நோக்கமாகும். 

அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற இடமளிக்கக்கூடாது.அவர்களின் சூழ்ச்சி, சதிகளுக்கு இடம்கொடுக்காமல், 

தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக இருந்து இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

Radio
×