குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கே புரளி கதை கூறிய முஸ்லிம் நபா் கைது..!

ஆசிரியர் - Editor
குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கே புரளி கதை கூறிய முஸ்லிம் நபா் கைது..!

கொழும்பில் குண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்திய நபரை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

பதுளை எல்ல பிரதேசத்தில் இன்று பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். பொரள்ளை குருப்பு மாவத்தை பகுதியை சேர்ந்த இந்த நபர், 

எல்ல நகரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். 57 வயதான முஸ்லிம் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி கொழும்பு நகரில் ஒரு இடத்தில் குண்டுத்தாக்குதல் நடக்க போவதாக இந்த நபர், வேறு பெயரில் இருக்கும் சிம் அட்டையை பயன்படுத்தி, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Radio
×