காங்கேசன்துறையில் கடற்படை சிப்பாய் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor
காங்கேசன்துறையில் கடற்படை சிப்பாய் உயிாிழப்பு..!

பணி முடித்து முகாம் திரும்பிய கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கி உயிாிழந்துள்ளாா். உயிாிழந்தவா் 28 வயதான சாமல்லசங்க வெந்தசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளாா். 

காங்கேசன்துறைப் பகுதியில் பணியில் இருந்த கடற்படை கப்பல் ஒன்று பணி முடித்து துறைமுகம் திரும்பிய நிலையில் அதில் இருந்த கடற்படையினர் தரை இறங்கியுள்ளனர். 

இதன்போது குறித்த கடற்படைச் சிப்பாயும் தரை இறங்கியுள்ளார். இவ்வாறு தரை இறங்குவதற்காக அருகில் இருந்த ஓர் மின் கம்பத்தை பற்றிப் பிடித்துள்ளார். 

அவ்வாறு பற்றிப் பிடித்த மின்கம்பத்தில் மின் ஒழுக்கு ஏற்பட்டு இருந்துள்ளது. இதனால் மின்சாரத் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளார்.

மாலை 6.30 மணியளவில் மின்சாரத்தாக்கததிற்கு உள்ளானவரை கடற்படையினரின் வைத்தியசாலையில் அனுமதித்து அங்கிருந்து 

உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 7.30 மணியளவில் அனுமதித்தபோதும் 

குறித்த கடற்படை சிப்பாய் ஏற்கனவே உயிரிழந்திருந்தமையினை வைத்தியர்கள் உறுதிசெய்தனர். 

இவ்வாறு உயிரிழந்த கடற்படைவீரரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்

Radio
×