245 சைவ ஆலயங்களின் புனரமைப்புக்கு நிதி வழங்கிய அமைச்சா் மனோகணேசன்..

ஆசிரியர் - Editor
245 சைவ ஆலயங்களின் புனரமைப்புக்கு நிதி வழங்கிய அமைச்சா் மனோகணேசன்..

இந்து சமய விவகார அமைச்சின் கீழ் நடமுறைப்படுத்தப்படும் தெய்வீக சேவைத் திட்டம்  யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் உள்வாங்கப்பட்ட சுமார் 245 ஆலயங்களுக்களை புணர்நிர்மாணம் செய்வதற்கான நிதி  வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் மண்டபத்தில்  நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்து சமபய விவகார அமைச்சர் மனோ கனேசன் தலமையில் 

நடைபெற்ற நிகழ்வில் வைத்தே மேற்படி ஆலயங்களை புணரமைப்பதற்கான நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன்,கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,

 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தாத்தன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

Radio
×