SuperTopAds

அரச காணியில் குடியிருக்கும் மக்களுக்கு இன்ப அதிா்ச்சியளிக்கும் செய்தி..! பிரதமா் ரணில் அறிவித்தாா்..

ஆசிரியர் - Editor I
அரச காணியில் குடியிருக்கும் மக்களுக்கு இன்ப அதிா்ச்சியளிக்கும் செய்தி..! பிரதமா் ரணில் அறிவித்தாா்..

அரசாங்க காணிகளில் 10 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அந்த காணிகள் சொந்தமாக வழங்கப்படுவதுடன், காணி உாித்து பத்திரங்களும் வழங்கப்படவுள்ள தாக பிரதமா் அறிவித்துள்ளாா். 

அப்பாவி மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாகும் என்று பிரதமர் கூறினார். இதற்காக செயல்திறன் மிக்க வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் வீடு மற்றும் காணி உறுதிகளை வழங்குவதன் மூலம் கிராம மக்களின் கனவு நனவாவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். காணி உறுதிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் பல வருட காலங்களாக 

அந்தக் காணிகளில் வாழ்ந்து வந்தபோதிலும் அவற்றுக்கு உறுதிப்பத்திரங்கள் இருக்கவில்லை. இந்த மக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். காணிகளுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் 

அவர்களது நீண்டநாள் கனவு நனவாவதாகவும் அவர் கூறினார். பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமையற்று வாழும் கண்டி மக்களுக்கு ஆயிரம் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.

இது தொடர்பான நிகழ்வு நாவலபிட்டி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.