SuperTopAds

மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49 போ் கைது..!

ஆசிரியர் - Editor I
மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49 போ் கைது..!

தாய்லாந்து வழியாக மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 49 வெளிநாட்டினர் மீட்பு தாய்லாந்து வழியாக மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த மியான்மரைச் சேர்ந்த 49 பேர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர். 

தாய்லாந்தின் சோங்கிலா(Songkhla) மாகாணத்தின் ரத்தனபூம் மாவட்டத்தில் ஒரு வாகனத்திலிருந்து 8 மியான்மரிகளை காவல்துறையினர் மீட்டதாக குழந்தை பாதுகாப்பு, 

பெண்கள் மற்றும் மனித கடத்தல் மையத்தின் இயக்குனர் ஜெனரல் சூசெரஸ் தீராசாவத் கூறியுள்ளார். “வாகனம் ஒன்றில் மறைந்திருந்த அவர்கள் மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்தனர். 

இது தொடர்பாக தாய்லாந்தினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார். சோங்கிலா மாகாணத்தின் வனப்பகுதியில் நடந்த மற்றொரு மீட்பு நடவடிக்கையில், 

ரோஹிங்கியா உள்பட 41 மியான்மர் முஸ்லீம்கள் மீட்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் சோங்கிலா மாகாணத்திலிருந்து மலேசிய எல்லை சுமார் 100 கிலோ மீட்டருக்குள் அமைந்திருப்பதால், 

இவ்வழியாக அண்டை நாட்டுத் தொழிலாளர்கள்/ குடியேறிகள்/ அகதிகள் கடத்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகின்றது. இதில் பெரும்பான்மையாக வறுமையில் சிக்கியுள்ள மியான்மர், 

லாவோஸ், கம்போடிய நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவணங்களின்றி இடம்பெயருகின்றனர்.