நாவற்குழியில் குவிக்கப்பட்ட சிங்கள மக்கள், அதியுச்ச இராணுவ பாதுகாப்புடன் விகாரை திறப்பு விழா..

ஆசிரியர் - Editor I
நாவற்குழியில் குவிக்கப்பட்ட சிங்கள மக்கள், அதியுச்ச இராணுவ பாதுகாப்புடன் விகாரை திறப்பு விழா..

யாழ்.நாவற்குழியில் மேற்கொள்ளப்பட்ட புதிய சிங்கள குடியேற்றத்தில் மிகப் பெரியளவில் அமைக்கப்பட்ட சம்புத்தி சுமன விகாரை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

போர் முடிவடைந்த பின்னர் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றப் பிரதேசத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு கடுமையான எதிர்ப்புக்கள் இருந்த நிலையிலும் அந்த விகாரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் 

சம்புத்தி சுமன எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரையின் புன்னிய திருவிழாவாக இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த விகாரைக்கான புனித தாது குருநாகல் நெவகட செல்கிரி விகாரையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தது. 

இதற்கமைய நவாற்குழிச் சந்தியிலிருந்து குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு பவணியாக புனித தாது கொண்டு செல்லப்பட்டது. சிங்கள பாரம்பரிய முறைப்படி குறித்த விகாரைக்கு எடுத்து வரப்பட்டு புன்னிய திருவிழா நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட இரானுவத் தளபதி மேஐர் nஐனவர் தர்சன கெட்டியாராச்சி உள்ளிட்ட இரானுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், உட்பட பெருமளவிலான இரானுவத்தினர் கலந்து கொண்டிருந்தனர். 

அதே போன்று பெருமளவிலான சிங்கள மக்களும் பல இடங்களிலில் இருந்தும் வந்திருந்தனர். இதற்கும் மேலாக அதிகளவிலான பௌத்த பிக்குகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.  

இதே வேளை இந் நிகழ்விற்கு இரானுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அத்தோடு விகாரைக்குள் செல்வதற்கு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு