காதி நீதிமன்றம் குறித்து புதிய சா்ச்சை..! 10 வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்ட முஸ்லிம் பெண் கூறும் அதிா்ச்சி தகவல்..
முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் காதி நீதிமன்றங்கள் ஊடாக ஆண்களுக்காக பக்கச்சாா்பான தீா்ப்புக்களே வெளியாவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் முஸ்லிம் பெண் ஒருவா் இந்த நீதிமன்றத்தினால் பல பெண்கள் குழந்தைகளுன் வீதியில் நிற்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
வெலிமடையை சோ்ந்த பெண் ஒருவா் அவருடைய தந்தையுடன் நேற்று ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே இதனை வெளிப்படுத்தியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், தந்தையின் பாதுகாப்பில் இருந்த இவர், 10 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் தனது கணவருக்கு தவறான உறவு காணப்படுவதாக பதுளையில் உள்ள காதி நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனினும் தனது குழந்தையை பராமரிக்க நியாயமான இழப்பீட்டை அந்த நீதிமன்றத்திடம் கோரிய போதும், அது கிடைக்கவில்லை என அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.