நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும் முஸ்லிம் தலமைகள்..! இனவாதத்திற்கு தீனியாகும்.. முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளா்.

ஆசிரியர் - Editor I
நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும் முஸ்லிம் தலமைகள்..! இனவாதத்திற்கு தீனியாகும்.. முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளா்.

ஜனாதிபதி தோ்தலில் முஸ்லிம் வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது தொடா்பாக முஸ்லிம் தரப்புக்கள் மிக தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது. 

பிரதான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யாத, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான வேட்பாளர் ஒருவர் 

தேர்தலில் களமிறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சார்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 

இந்த வேட்பாளரை பெயரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முஸ்லிம் வேட்பாளருக்கு அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் கட்சிகள் கூட்டாக இணைந்து ஓர் முஸ்லிம் கூட்டணியை உருவாக்கி அதன் ஊடாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என்ற போதிலும் முஸ்லிம்களின் பலத்தை நிரூபிக்கும் நோக்கில் இவ்வாறு வேட்பாளர்கள் களமிறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இதுவரையில் இவ்வாறு முஸ்லிம் பிரதிநிதியொருவர் தேர்தலில் போட்டியிட்டது கிடையது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு