இறைவாி திணைக்களத்தின் யாழ்.பிராந்திய ஆணையாளாின் ஊழல்கள் அம்பலம்..! திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்திய மக்கள்..

ஆசிரியர் - Editor
இறைவாி திணைக்களத்தின் யாழ்.பிராந்திய ஆணையாளாின் ஊழல்கள் அம்பலம்..! திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்திய மக்கள்..

இறைவரித் திணைக்களத்தின்யாழ்.பிராந்திய ஆணையாளர் ஊழலில் ஈடுபட்டதாக சமூக சேவைகள் அமைப்புக்கள் உள்ளிட்ட பலஅமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ்.பிராந்திய உள்ளுர் இறைவரித்திணைக்கள ஆணையாளர் பந்துல ஹப்புதந்திரிய அனைத்து வரி செலுத்துனர்களையும்,அவர்களின் வருமானவரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, பெறுமதி சேர் வரி, 

பொருளாதாரசேவைக் கட்டணம் ஆகியவை தொடர்பாக நீதிக்குப் புறம்பாகவும் சட்டத்திற்கு முரணாகவும், மிகப்பாரிய ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளரின்குடும்பத்தினர், உள்ளிட்ட ஏனையோரின் வங்கி கணக்குகள் மற்றும் கையூட்டுகள் தொடர்பாகஉடனடியாகனதும், நீதியானதும், 

விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், கடந்த காலங்களின் ஆணையாளரின், அவரதுகுடும்பதினரினதும், முதலீடுகள் விசாரணை செய்யப்பட வேண்டும். 

இவ்வாறான விசாரணைகள்மேற்கொள்ளும் பட்சத்தில், இது சம்பந்தமான பல விடயங்களில் சாட்சியமளிக்க பலர்தயாராக உள்ளனர். இப்படியான விசாரணைகளை முன்னெடுப்பதன் மூலம் 

ஏனையோருக்கு எடுத்துக்காட்டாகவும், ஊழல் புரிவோருக்கு எச்சரிக்கையாகவும்,  அமைவதோடு,இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந் நடவடிக்கை உந்துதலாக அமையும் என்றும்தெரிவித்துள்ளனர்.

அத்துடன், யாழ்.பிராந்திய உள்நாட்டு இறைவரித்திணைக்கள ஆணையாளரின், ஊழல் சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மகஜரை, ஜனாதிபதி உட்பட பிரதமர், நிதியமைச்சர், வடமாகாண சட்டத்தரணிகள் சங்கத்தினர், 

உள்ளிட்டபல்வேறு அமைப்பினருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

Radio
×