கொலம்பியா- பனாமா இடையில் கைவிடப்பட்டு உயிாிழந்த யாழ்ப்பாண இளைஞன் அடையாளம் காணப்பட்டாா்..! சடலம் மீட்கப்பட்டது..
கொலம்பியாவுக்கும் பனாமாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் சேற்றுக்குள் சிக்கி உயிாிழந்த இளைஞன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றாா்.
நேற்று முன்தினம் குறித்த இளைஞன் சேற்றுக்குள் சிக்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான பீ.சுதர்ஷன் என்ற இந்த இளைஞன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா நோக்கி சென்றுள்ளார்.
பயண முகவர் ஊடாக அமெரிக்கா செல்லும் வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பனாமா ஏரி பிரதேசத்தில் நடைப்பயணத்தில் ஈடுபட்டபோது
சேற்றுக்குள் சிக்கி அவரால் வெளியே வர முடியாமல் போனதாக அவருடன் சென்ற ஏனைய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பொலிஸாரினால் பனாமா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவரது மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உறவினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என ஊடகங்களில் முன்னுக்கு பின் முரணான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் வேளை எமது ஊடக வலையமைப்பு உறவினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சில தகவல்களை அறிந்துகொண்டது அவற்றை இங்கே இணைத்துள்ளோம்.
துணைவியார் மறுப்பு !
இந்த செய்தியை கொழும்பிலுள்ள அவரது துணைவியார் மறுதலித்துள்ளார். தனது கணவர் உயிருடன் இருப்பதாக தான் நம்புவதாகவும். இதே படத்தை கணவர் ஏற்க்கெனவே தனக்கு அனுப்பியிருந்தார் எனவும் காலில் காயம்பட்ட தனது கணவர் பனாமாவிலுள்ள இராணுவ முகாம்களில் ஒன்றில் இருப்பதாக தான் அறிந்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட வர்கள் அதை உறுதி செய்ய மேலும் இரு வாரங்கள் காலதாமதம் கேட்டதாகவும். தெரிவித்துள்ளார்.
எனினும் காட்டில் கைவிடப் பட்டதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படும் பயண வாசியின் சகோதரன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில். தனது சகோதரன் பற்றிய தகவல்களில் இருட்டடிப்புகள் இருப்பதாக தாம் நம்புவதாக வேதனையுடன் தெரிவித்தார்.
தனது கவலைகளுக்கு அப்பாற்ப்பட்டு அவர் தெரிவித்த கருத்து ஒன்றை நாம் பதிவுசெய்வதில் தப்பில்லை. வெளிநாடொன்றில் நல்ல வேலைவாய்ப்பில் இருந்த தமது சகோதரர் இலங்கை வந்து ஏன் இப்படி ஒரு பயணத்தை ஆரம்பித்தார் என தாம் அறிந்திருக்கவில்லை எனவும் - செய்திகளை படித்தே அறிந்தேன் எனவும். இவ்வாறான நிலைமை யாருக்கும் வரக்கூடாது எனவும் தெரிவித்த அவர். இந்த பதிவை அகற்றிவிடவா என கேட்டபோது. படம் ஒன்று வெளிவந்துவிட்டது அதை கண்டு துவண்டுபோயுள்ளோம் . இனிமேலே எடுத்து என்ன விட்டு என்ன - நாலுபேர் இதை அறிவதால் சமூகம் விழிப்படையும் என தெரிவித்தார். சமூகவலைத்தளங்களில் பரவிய இந்த செய்தியை நாமும் பகிர்ந்தோம் வேதனை கொண்டுள்ளோம். இருக்கிறாரா இல்லையா என்கின்ற செய்திகளுக்கு அப்பால் அவருக்காக பிரார்த்திப்போமாக. கடந்த காலங்களில் இவ்வாறான பல ஐரோப்பிய அமெரிக்க பயணங்களில் பலர் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News: https://seithy.com/breifNews.php?newsID=227818&category=TamilNews&language=tamil