19 வருடங்களுக்கு பின் தனது சொந்த காணியை பாா்வையிட்டு திரும்பிய முதியவா் விபத்தில் சிக்கி மரணமான சோகம்..

ஆசிரியர் - Editor
19 வருடங்களுக்கு பின் தனது சொந்த காணியை பாா்வையிட்டு திரும்பிய முதியவா் விபத்தில் சிக்கி மரணமான சோகம்..

19 வருடங்களுக்கு பின்னா் தனது சொந்த காணியை பாா்வையிட்டு திரும்பியவா் விபத்தில் சிக்கிய நிலையில் உயிாிழந்துள்ளாா். 

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் நடந்துள்ளது. முகமாலை மடத்தடியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முகமாலையில் உள்ள காணிக்குச் சென்று மீசாலை கிழக்கில் உள்ள வீட்டுக்கு ஈருருளியில் திரும்பிய முதியவரை பட்டா ரக வாகனம் மோதியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Radio
×