கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

மனைவி உயிாிழந்த சோகத்தில் தன் உயிரை மாய்த்த கணவன்..

ஆசிரியர் - Editor
மனைவி உயிாிழந்த சோகத்தில் தன் உயிரை மாய்த்த கணவன்..

தம்புள்ள பகுதியில் தன் மனைவி உயிாிழந்த சோகம் தாங்க முடியாமல் கணவா் ஏாியில் குதித்து உயிாிழந்த சம்பவம் பெரும் துயரத்தை உண்டாக்கியுள்ளது. 

ரத்மல்கஹாஎல பகுதியை சேர்ந்த பியசேன என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிற்பகல் முதல் வீட்டில் காணாமல் போயிருந்த குறித்த நபரை தேடும் போதே அவரது சடலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் மனைவி உயிரிழந்துள்ளார். மிகவும் நேசித்த மனைவி உயிரிழந்த பின்னர் மன வேதனையிலேயே அவர் காணப்பட்டுள்ளார்.

என தற்கொலை செய்து கொண்டவரின் மகன் தெரிவித்துள்ளார். இனி நான் தனியாக வாழ்ந்து என்ன பயன் என கூறி அவர் பல நாட்களாக தனியாக அழுவார் 

என மகன் குறிப்பிட்டுள்ளர். கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

எனினும் இந்த முறை அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக மகன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சமகாலத்தில் மனைவிக்காக உயிரை தியாகம் செய்ய துணிந்த கணவனின் அன்பை எண்ணி இலங்கையர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Radio
×