கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த எழுத்துமூல உத்தரவாதம் கொடுத்தார் ரணில்!

ஆசிரியர் - Admin
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த எழுத்துமூல உத்தரவாதம் கொடுத்தார் ரணில்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று எழுத்துமூல உத்தரவாதமொன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையடுத்து நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்கும் என தெரிய வருகிறது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்ற போது, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஆராயப்பட்டது. அரசுக்கு எதிராக வாக்களிப்பதில் எந்த இலாபமுமில்லையென அனேகமான உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. 

அரசின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அரசை வீழ்த்துவதால் எந்த பலனும் கிடைக்காதென கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், கூட்டமைப்பின் ஆதரவிற்காக கல்முனை விவகாரத்தையாவது ரணில் நிறைவேற்றித்தர வேண்டுமென உறுப்பினர்கள் வலியுறுத்தியதாகவும் இதையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.

இதன்போது, கல்முனையை தரமுயர்த்துவதற்கான உறுதிமொழியை இரண்டாவது முறையாக பிரதமர் ரணில், எழுத்துமூலம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று மாலை இடம்பெறவுள்ள அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு